| | நல்லற மென்ற இல்லறந் துறந்து | 25 |
| | சொல்லறம் பூண்டு சுற்றினேன் யாண்டும், கல்லெறி பட்டுக் காயம் உற்றேன், இடுபழி யேற்றேன் இருஞ்சிறைப் பட்டேன், கெடுவழி செல்லாது நடுநிலை பிறழாது | |
| | அடுபகை நீக்க அறப்போர் தொடுத்தேன், | 30 |
| | உயிரும் ஈய உறுதி பூண்டுளேன், இயலிசை கூத்தெனும் என்தமிழ் உரிமை எய்துமுன் இறக்க ஏலேன் தாயே! | |
| |
| எதை நான் எண்ணுவேன் |
| | | |
| | செய்தஎன் பணியெலாம் சீர்பெறுங் கொல்லோ? | |
| | வைதலும் வாழ்த்தலும் வழங்கியோர் தாய்மொழி | 35 |
| | தழைத்திடச் சேர்ந்துடன் உழைத்திடு வார்கொலோ? தனிப்பகை நீங்கி ஒருப்படு வார்கொலோ? நற்றமிழ் ஈங்குக் கொற்றம் புரியக் கற்றவர் மற்றவர் கலந்தழைப் பார்கொலோ? | |
| | பகுத்துணர் வூட்டிப் பைந்தமிழ் கூட்டி | 40 |
| | அகத்துள் ஏற்றிய அணையா விளக்கம் நின்றொளி வீசி நிமிர்ந்தெழுங் கொல்லோ? இன்றுள நிலையில் எவரைநான் எண்ணுவேன்? | |
| | | |
| | ஒவ்வொரு வகையினர் | |
| | | |
| | ஒவ்வொரு தமிழரும் ஒவ்வொரு வகையினர் | |
| | ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு நிலையின; | 45 |
| | ஒவ்வொரு நிலையும் உன்னுதல் தன்னலம்; தன்னலம் தவிர்ந்து தமிழ்நலங் கருதித் தண்டமிழ்க் குரிமை தந்தனர் என்னும் ஒளிதெரி யாமுனம் உயிர்பிறி தாக | |
| | வழிவரு மோவென அழிதுய ருற்றேன்; | 50 |
| --------------------------------------------------------------- |
| | கொற்றம் - அரசு. | |
| | | |