| | நின்கடன் | |
| | | |
| | அன்னை மொழிக்கே அரியணை வேண்டும் என்னும் ஆசை என்னைப் பிணைத்தது; நின்மக ளாசை நிறைவுறச் செய்வது நின்னை யல்லால் பின்னை எவர்கடன்? | |
| | சூழ்நிலை யொன்றும் துணையெனக் கொளாது | 55 |
| | வாழ்நா ளெல்லாம் வண்டமிழ் மொழிக்கே உழைத்துழைத் திருந்தேன் உறுபயன் என்கொல்? | |
| |
| பொற்காலம் பூக்குமோ? |
| | | |
| | மழைத்துளி கண்ட வான்பயிர் போல முளைத்ததோர் உணர்ச்சி! தழைத்தது தாய்மொழி! | |
| | புதியபொற் காலம் பூத்தது! நாட்டில் | 60 |
| | முதியரும் இளைஞரும் மூண்டெழுந் தார்த்தனர்! என்றுமுள தென்றமிழ் என்னும் வாய்மொழி நின்று நிலைத்தது எனுநிலை வருங்கொலோ?' என்றுபல புலம்பி இருவிழி சோர; | |
| | | |
| | பூங்கொடி நோய்வாய்ப்படல் | |
| | | |
| | `வரும்வரும்' என்று சிறையகம் திறந்தே | 65 |
| | ஒருமகள் வந்தவண் உணவொடும் நின்றனள்; திருமகள் உணவினைத் தீண்டவும் செய்திலள்; வருமகள் வருந்தி வஞ்சியின் உடம்பைத் தொட்டனள்; தழலாய்ச் சுட்டது மெல்லுடல்; | |
| | சட்டெனக் காவலர்க் குற்ற துரைத்தனள்; | 70 |
| | | |
| | மருத்துவ மனைக்கு விலங்குடன் செல்லல் | |
| | | |
| | வெப்பு நோயின் வேகம் ஏறி ஒப்பிலாள் படுதுயர் உணர்ந்த காவர் குற்றம் பிரிய நற்றமிழ் மங்கையைப் பற்றும் விலங்கொடு பற்றினர் சென்று | |
| | மருத்துவ மனையிற் கிடத்தினர் அந்தோ! | 75 |
| --------------------------------------------------------------- |
| | பின்னை - பின்பு. | |
| | | |