‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது பழமொழி. இப்பழமொழியை உள்ளத்திற் பதித்தே ‘இராசேந்திரன் கவிதைகள் ’திரட்டப்பட்டிருக்கின்றன. என் உள்ளத்தில் ஏதோ ஓர் முலையில் உறங்கிக் கிடந்த கவிதை உணர்ச்சிக்கு மதிப்பளித்து என்னை இந்நூலின் தொகுப்பாசிரியனாக்கிப் பெருமைப்படுத்திய என் கடந்த கால வகுப்பாசிரியராகிய கவிஞர், கைம்மாறாக என் இதயத்தை எடுத்துக் கொள்ளட்டும். மார்கழி மாதத்து வைகறைப் போதில் தன் தோழியர்களையெல்லாம் துயில் எழுப்பி, “நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்” என்று ஆண்டாள் அழைப்பதாகக் காட்டுகிறது - திருப்பாவை. நானும், கற்கண்டுக் கவிதைகளின் காதலர்களை அழைக்கிறேன்.நீராட வாருங்கள்.... இதோ வெள்ளம்! நீராட வாருங்கள்.... இதோ புதுவெள்ளம்! கவிதை வெள்ளம்.... வெள்ளமோ வெள்ளம்!
|