பக்கம் எண் :

13

இரு துளிகள்

(முதற்பதிப்பின் மதிப்புரை)

முனைவர் நா. இலக்குமணப் பெருமாள்

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கங்கைப் பெருக்கா? காவிரி வெள்ளமா? பூவிரி பொருநையின்
புதுப்புனல் நீரா?

இனிமை காண இதோ இரு துளிகள்!

முடிவை நீங்கள் சொல்லுங்கள்!

பொதுவாகத் துளிகளின் தண்மையும் மென்மையும் போக்கும்
நோக்கும் கவி பாரதிதாசன் கவிதைகளை நினைவுபடுத்துகின்றன.

வேறுபாடு.....? இல்லாமலில்லை.

இனம், மொழி என்ற பெயரால் பாரதிதாசன் கவிதையில்
காணப்படும் ‘மூடநம்பிக்கை’ கவிஞர் இராசேந்திரன் கவித் துளிகளில்
இல்லை.

“மூடநம்பிக்கையா? பாரதிதாசனிடமா.....?

புரிகின்றது. நன்றாகப் புரிகின்றது. நீங்கள் புருவத்தை நெரிப்பது
புரியத்தான் செய்கின்றது.

இதோ பாருங்கள்.1

மாலை நேரம். “மருது” அவளை மாடியில் கண்டான்; உவப்பிற்
கலந்து நின்றான். இரண்டு மாடிகள்; எட்டியிருந்தன. எப்படிப்
பேசுவது?


1. காதல் நினைவுகள் பக் 35 - 39