பக்கம் எண் :

14

நண்பன் “சீனு” நன்றாய் உதவினான்.

அதன் பின்...?

“அவன் விழி அவள் விழி அன்பிற் கலந்தன.”
‘அகல்யா” சிரித்தாள், அவனும் சிரித்தான்”

கைகள் காட்டி கருத்துரைத்தார்கள்
“என் சொத்துக்களை உன் பேருக்கே
எழுதிவைக்கவா? என்றான் மருது!
“வேண்டாம்! உன்றன் விருப்பம் வேண்டும்,”
என்றுகை காட்டினாள் எழிலுறும் அகல்யா,
‘அழகிய நகையெல்லாம் அனுப்பவா’ என்றான்
வேண்டாம் என்று மென்கை அசைத்தாள்.
“இன்று மாலை இவ்வூர்ப் புறத்தில்
கொன்றையும் ஆலும் கொடும்பாழ் கிணறும்

கூடிய தனிஇடம் நாடி வா’ என்று
மங்கை உரைத்து மலருடல் மறைத்தாள்.”

பார்த்தீர்களா? காதல் தானே....? உண்மைக் காதல்தானே....?
தெரிகின்றதல்லவா?.... இன்னும் பாருங்கள்.

மாலை நேரம். மங்கை அகல்யா, மரத்தினடியில் பண்ணொன்று
இசைத்தாள். அவ் வேளை, “கன்னல்” என்ற இன்னொரு பெண்ணாள்,
(அவள் மருதுவினால் வேம்பென வெறுக்கப்பட்டவள்) ‘என் வாழ்வை
வீணாக்கிய நீ ஞாலமேல் வாழுதி நன்றே” என்று வசை மொழி
வழங்குதல் கேட்டான் மருது.

அவன் அகல்யா இருந்த மரத்தடி சென்றான். அவள் பாடிய
பண்ணைக் கேட்டான். அப்போது பாடுகிறார் பாரதிதாசன்;

“........மெல்லியின் பாட்டில்
தமிழிசை இருந்தது. தமிழ்மொழி இல்லை!

செழுமலர் இருந்தது, திகழ்மண மில்லை!
வள்ள மிருந்தது வார்த்த தேனில்லை!