தணலால் அவனுளம் தாக்கப் பட்டது. ............................................................................. அகல்யா காதலால் ஆயிரம் சொன்னாள்! சொன்னவை தெலுங்கர்க்குச் சுவைதரத் தக்கவை!” என்று நினைத்து அகல்யாவை விலக்கி, தமிழ்ப் பெண கன்னலிடம் தாவி ஓடினான் மருது . அகல்யா விடாது தொடர்ந்தாள். இருந்தும் என்ன? அவள் தெலுங்கச்சி தானே? கன்னலும் மருதுவும் கலந்தார்கள். அகல்யாவின் கதி? பாழுங் கிணற்றில் அகல்யா வீழ்ந்தாள். என்ன சொல்லுகிறீர்கள்? அன்பால் கட்டுண்ட இதயத்தை ‘மொழி’ ‘இனம்’ என்ற ஆயுதங்களால் வெட்டுண்டு சிதறவைப்பது சரியா? இல்லை, முறையா? இதற்குப் பெயர்தான் தமிழ்ப்பற்றா? “வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்” என்று பாடிய பாரதிதாசன் தமிழ்ப் பற்றுக்குத் தலை வணங்குகிறோம். ஆனால் ‘அன்பு’ - ‘காதல்’ ஏற்படுவதுகூட ‘மொழி’ ‘இனம்’ பார்த்துத்தான் ஏற்பட வேண்டும் என்ற மூடநம்பிக்கைக்குமா தலைவணங்க வேண்டும்? முடியாது. ஒருக்காலும் முடியாது.
இதைக்கூறுவதன் நோக்கம் கவி பாரதிதாசனைக் கண்டிக்க வேண்டும் என்பதற்காக அல்ல! கவிஞர் இராசேந்திரன் கவித்துளிகளில் இக் ‘குறைபாடு’ இல்லை என்பதைக் காட்டுவதற்காகத்தான். ஒரு துளி காட்டலாம். அவன் ஏரிக்குப் பக்கத்தில் அவளைக் கண்டான்; வெகு நாளாய்க்கண்டான். கொஞ்சம் மயக்கமும் கொண்டான். |