எப்படி இருப்பவளோ? என்னை மணக்கப் போகிறவள் எங்கே இருப்பவளோ? இதயம் குடிவரப் போகிறவள் எப்படி இருப்பவளோ? (என்னை.....) புன்னை மரத்தில் பொன்போல் மின்னும் பூவாய் இருப்பவளோ? புலரும் வைகறைப் பொழுதில் படிந்த பொலிவாய் இருப்பவளோ? தென்னை நிறைந்த கேரள நாட்டின் செழிப்பாய் இருப்பவளோ? தித்திப் புத்தரும் கோவைப் பழம்போல் சிவாப்பாய் இருப்பவளோ? (என்னை.....) செவியில் அமுதம் பொழியும் பிள்ளைச் சிரிப்பாய் இருப்பவளோ? சிந்தை கவரும் மல்ல புரத்துச் சிலையாய் இருப்பவளோ? கவியின் இளமைக் காலக் கனவின் களிப்பாய் இருப்பவளோ? கார்கா லத்தின் நீர்மே கம்போல் கறுப்பாய் இருப்பவளோ? (என்னை.....) |