“கலையழகுச் சித்திரம்போல் கண்கவரும் உம்மைக் கைப்பிடிக்கக் கடல் அளவு ஆசைதான் - ஆனால் மலையாள மங்கைநான்! தமிழ்மகன் நீர்! இனிதாய் மணம்புரிய வழியுண்டா நாம்?” என்று கேட்டாள்; “சிலையே! நற் காதல்முன் சாதி இன பேதச் சிந்தனைக்கே இடமில்லை; வா,” என்றேன். பின்னர் அலையோடே அலையானோம்! அமுதுண்ணலானோம்! ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்தம் அங்கே! |