பக்கம் எண் :

மீரா கவிதைகள்.85

ஓவியமாய் உன்னுருவைத் தீட்டி - என்றன்
உள்ளமெனும் சுவர்வைத்தேன் மாட்டி - தமிழ்க்
காவியமே! அன்புணர்ந்து
காணிக்கை வை, உதட்டைப்
பூட்டி, சீ மாட்டி!

காந்தளிளம் பூவிரண்டைச் சூடி - வாடி
காட்டுமயில் போல்நடனம் ஆடி - உன்
கூந்தல்தரும் தண்ணிழலில்
குடியிருக்க வேண்டுமடி
வாடி! பண் பாடி!