பக்கம் எண் :

88.மீரா கவிதைகள்

குறும்புக்காரி

இரவுமணி பத்திருக்கும்.... மேல்மா டத்தில்
இருந்தேன்நான் தென்மதுரைத் தென்ற லோடு!
பருவத்தில் இளவேனில் போன்ற என்றன்
பன்னீர்ப்பெண் அருகிருந்தே அளிக்கும் காட்சி
விருந்துக்குத் துடித்தனஎன் விழிகள்.... அந்த
வேளையிலே, சோலையிலே மலர்ந்த பூப்போல்
சிரித்தபடி ஒயிலாக வந்தாள்; வந்து
சீனியிட்ட பால்தந்தாள்! தேமா தந்தாள்!

“ஆவின்பால் உடலுக்குத் தேவை; உன்றன்
அன்புப்பால் என்னுயிர்க்குத் தேவை. சங்கப்
பாவின்பால் அன்றுமனங் கொடுத்தேன்; உன்றன்
பார்வையின்பால் இன்றுமனங் கொடுத்தேன். கண்ணே!
பூவின்பால் வண்டுவந்து பொருந்திக் காணும்
புதுஇன்பம் மதுஇனபம் தன்னை இன்று
நாவின்பால் இதழின்பால் நயனத் தின்பால்

நான்காணத் தூங்காமல் ஏங்கு கின்றேன்.