புலவர் சிவ. கன்னியப்பன் 101

அடிமைப் படுகுழியில் வீழ்ந்தோம் - வெறும்
       அரிசிப் புழுக்களெனத் தாழ்ந்தோம்.
கொடுமை கண்டுமனம் கொதித்தான் - கவி
       கொட்டி வீரியத்தை விதைத்தான்.       8

ஊனைப் பெரியதெனக் கொண்டோம் - ஆன்ம
       உணர்வை விற்றுருசி கண்டோம்.
மானம் போகும்என்ற நிலைமை - தனை
       மாற்றும் பாரதியின் புலமை.       9

பண்டைச் சிறப்புகளைப் பாடிக் - கிழப்
       பாட்டிகள் கூட்டமெனக் கூடி
அண்டிப் பதுங்கிவிட்ட நாட்டில் - நவ
       ஆர்வம் வளர்த்தவன் பாட்டே.       10

தீரன் அறிவுரையை இகழ்ந்து - வெறும்
       திவசம் நடத்திமட்டும் மகிழ்ந்து,
பேரைக் கெடுத்துவிட மாட்டோம் - எனும்
       பிரதிக்ஞை பூண்டுவரம் கேட்போம்.       11

கவிஞன் வாக்குறுதி பலிக்கும் - நம்
       கவலை தீர்ந்துநலம் ஜொலிக்கும்
புவியில் கீர்த்தியுடன் வாழ்வோம் - வெகு
       புதுமை யாகஅர சாள்வோம்.       12

வாழ்க பாரதியின் அருமை - அதில்
       வளர்க தாய்மொழியின் பெருமை.
வாழ்க வையகத்தில் யாரும் - பிணி
       வறுமை அச்சமற்று வாழ்க.       13

குறிப்புரை:- கீர்த்தியுடன் - புகழுடன்; புவி - பூமி;
பிரதிக்ஞை - உறுதி.

55. வல்லபாய் பட்டேல்

இல்லாத காந்திமகான் இருந்தாற் போல
       எப்பொழுதும் காந்திவழி எடுத்துக் காட்டிக்
கொல்லாத விரதமதே குறியாய்க் கொண்டு
       குற்றமற்ற சத்தியமே நெறியாய்க் கூடிக்