உன்னைப் படைத்தவனை எண்ணிச் சுகித்த துண்டோ? மனமே! (ஒரு)அநுபல்லவி திருநாளும், தேரும்என்று தேடி யலைந்தல்ல சிந்தனை அலையாமல் தியானத்தில் நிறுத்தியே (ஒரு) சரணங்கள் விடியுமுன் விழித்தனை வெளுக்குமுன் வீட்டை விட்டாய் வெவ்வேறாம் இடத்துக்கு வௌவால்போல் ஓட்டமிட்டாய் உடலும் மனமும் சோர்ந்து ஓய்ந்திட வீடுவந்தும் உண்ணும் பொழுதுங்கூட எண்ணம் நிலைப்பதில்லை. (ஒரு)1 அரைக்காசுக் கானாலும் ஒருநாள் முழுதுங்காப்பாய் ஆயிரம் பேரையேனும் அலுப்பின்றிப் போய்ப்பார்ப்பாய் உரைப்பார் உரைகட்கெல்லாம் உயர்ந்திடும் செல்வனை உன்னுள் இருப்பவனை எண்ணிட நேரமில்லை! (ஒரு)2
சிலநாளைக் கதிகாரம் செய்யும் ஒருவர்க்கஞ்சிச் செய்யச்சொல் வதையெல்லாம் செல்வாய்நீ பல்லைக் கெஞ்சி; பலநாளும் ஜென்மமெல்லாம் பாவிக்கும் அதிகாரி பரமனை நினைக்கவும் ஒரு கணம் உனக்கில்லை (ஒரு)3 |