126நாமக்கல் கவிஞர் பாடல்கள்

‘நாளும் கிழமை‘ யென்று
              நல்லவர் உரைத்தாலும்
       ‘நாளைக்கு ஆகட்டும்
              வேலை அதிகம்‘ என்பாய்!
பாழும் பணத்தைத் தேடிப்
              படும்பாடு கணக்கில்லை.
       பகவானை எண்ணமட்டும்
              அவகாசம் உனக்கில்லை       (ஒரு)4

குறிப்புரை:- படும்பாடு - படுகின்ற துன்பம்; பகவான் - இறைவன்; அவகாசம் -போதியநேரம்.

67. இந்தியத் தாய் தோத்திரம்

பல்லவி

தாயே வந்தனம்! - இந்தியத்
தாயே வந்தனம்.

அநுபல்லவி

தாரணி தன்னில் வேறிலை இணையெனப்
பூரண வளந்திகழ் புண்ணிய பூமியெம்       (தாயே)

சரணங்கள்

நிலவளம் நீர்வளம் நிறைந்ததுன் நாடு;
       நீண்டஉன் பரப்பிலும் வேறிலை ஈடு;
விலையிலும் விளைவிலும் மலிந்ததுன் தேசம்;
       வேண்டிய யாவும்உன் எல்லையில் வாசம்.       (தாயே)1

முப்பதும் பத்துமாம் கோடிஉன் மக்கள்;
       மூவுலகத்தையும் ஆண்டிடத் தக்கார்;
அற்புத மாகிய ஆற்றல்கள் நிறைந்தாய்
       அறியாத் தனத்தால் அடிமையில் இருந்தோம்.       (தாயே)2

படையெடுத் தவரும் பசியெடுத் தவரும்
       பற்பல நாட்டார் உனையடுத் தவரை