அடைவுடன் அத்தனை பெயரையும் தாங்கி ஆதரித் தாண்டஉன் அருங்குணம் ஓங்க (தாயே)3பாஷைகள் பற்பல படித்தவள் நீயே படித்ததன் பயன்பெறும் நடத்தையுள் ளாயே ஆசைகள் அகற்றிய அறங்களிற் சிறந்தாய் அன்பின் வழிகளை அனைத்தையும் அறிந்தாய். (தாயே)4
ஞானமும் கலைகளுக் கிருப்பிட மாவாய் நாகரி கத்தின் பிறப்பிட மாவாய் தானமும் தவங்களைத் தாங்கின துன்கை தருமம் யாவையும் தழைத்தது மிங்கே. (தாயே)5 மதவெறிக் கொடுமையை மாற்றும்உன் பொறுமை மற்றவர் மதத்தையும் போற்றுமுன் பெருமை சதமெனும் சத்திய சாந்தியை உரைப்பாய் சன்மார்க் கத்தவர் சிந்தையில் இருப்பாய். (தாயே)6 குறிப்புரை:- தானம் - நன்கொடை, பெருங்கொடை, ஈகை: தருமம் - அறம், நற்செயல்,நல்லொழுக்கம்;சதமெனும் - நிலைமையெனும்; இறுதியெனும் சாந்தி - குற்ற நீக்கத்திற்குச் செய்யும் செயல்; மூவுலகு - இம்மை, மறுமை, பாதாளம். 68. கடவுளை அறிந்தவர் பல்லவி அவரே கடவுளை அறிந்தவராவர் அனைவரும் மதித்திடத் தகுந்தவராவர் (அவரே) அநுபல்லவி துன்பப் படுவோர் துயரம் சகியார் துடிதுடித் தோடி துணைசெயப் புகுவார் இன்பம் தனக்கென எதையும் வேண்டார் யாவரும் சுகப்பட வேலைகள் பூண்டார் (அவரே) |