சரணங்கள் பசியால் பாடின எவரையும் பார்த்துப் பட்டினி தமக்கெனப் பரிதபித் தார்ந்து விசையாய் முடிந்ததை விருப்புடன் கொடுப்பார் வீண்உபசாரம் விளம்புதல் விடுப்பார் (அவரே)1
நோயால் வருந்திடும் யாரையும் கண்டு நோன்பெனச் செய்வார் எல்லாத் தொண்டும் தாயாம் எனவே தம்சுகம் எதையும் தள்ளிவைத் தருகினில் தானிருந் துதவும். (அவரே)2 குறிப்புரை:- நோன்பு - விரதம்; நோயால் - துன்பத்தால்; விளம்புதல் - சொல்லுதல். 69. சத்தியம் மறந்தனை பல்லவி சத்தியம் மறந்தனை சாந்தம் குறைந்தனை சத்தியாக்ரஹம் விட்டு மனமே! அநுபல்லவி உத்தம வழியினை உலகினுக் குணர்த்திட உன்னை யன்றோ நம்பி யிருந்தேன்? சரணங்கள் உடல்பொருள் ஆவியும் உண்மைக்குத் தத்தம் என்றே ஓயாமல் உரைத்தனை மனமே! கடல்பெரும் பயன்வந்து கைகூடும் சமயத்தில் கைவிட நினைந்தனை மனமே! 1
அதிகார அகந்தையை அகற்றிட வேண்டுமென்றே அதற்கென்றே முன்வைத்தாய் மனமே! சதிகார ருடன் சேர்ந்தே அதிகார வெறிகொண்டு சங்கற்பம் மறந்தனை மனமே! 2 |