கோபமென் னும்வெயிலின் தாபமங் கடிக்காது குரோதமெ னும்பனியின் குளிர்வந்து நடுக்காது சாபம் பிறர்க்குச் சொல்லும் தாகமும் எடுக்காது சங்கடப் பேய்கள்நம்மை அங்கேதும் தடுக்காது. (நல்ல)2நாடும் மதங்களெல்லாம் கூடும்அவ் வழிசென்று நாலிரு வழிகட்கும் நடுவா னத்துவொன்று பாடும் மறைகளெல்லாம் தேடும் அதனையென்றும் பத்தி யுடையவர்க்குப் பாதை மிகவும் நன்று. (நல்ல)3 ஆய்ந்த பெரியவர்கள் தேர்ந்ததும் அவ்வழி ஆனந்த சுதந்தரம் போனவர்க் கங்குவெளி காந்தி முனிவன் சொல்லும் சாந்தமென் றொரு மொழி காட்டிய வழி சென்றால் வீட்டை யடைவாய் தெளி. (நல்ல)4 79, தேசத் தொண்டு பல்லவி தேசத் தொண்டுகள் செய்திடுவோம் தெய்வம் துணைவரக் கைதொழுவோம் (தேசத்) அநுபல்லவி நம்முடை நாட்டை நாம் ஆள நன்மைகள் முன்போல் இனிமீள எம்முடைய ராஜ்ஜியம் இதுவென்றே இந்தியர் மகிழ்ந்திடச் சொந்த மென்றால் (தேசத்) சரணங்கள் பஞ்சக் கொடுமையை ஒழித்திடவும் பாரத நாடினிச் செழித்திடவும் அஞ்சும் அடிமைத் தனம்நீங்கி அன்பின் ஆண்மை வேண்டுமென்றால் (தேசத்)1 சோறும் துணியும் இல்லாமல் சோம்பியிங் கெவரும் நில்லாமல் வீறும் புதுமைப் பொதுவாழ்வின் விடுதலை யின்பம் கொண்டுமென்றால் (தேசத்)2 |