138நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பட்டினி கிடப்பவர் இல்லாமல்
படிக்கா தவரெனச்சொல்லாமல்
எட்டின மட்டிலும் எல்லாரும்
இன்புறும் ராஜ்ஜியம்தென்படவே (தேசத்)3

இந்தியர் எல்லாம் ஒருஜாதி
       யாருக்கும் இங்கே ஒருநீதி
நெந்தவர் ஒருவரும் இல்லாத
       நூதன அரசியல் உண்டாக்க       (தேசத்)4

ஜாதிக் கொடுமைகள் நீங்கிடவும்
       சமரச உணர்ச்சிகள் ஓங்கிடவும்
நீதிக் கெல்லாம் இருப்பிடமாம்
       நிற்குமோர் அரசியல் உருப்படவே       (தேசத்)5

வரிகளை யெல்லாம் குறைத்திடவே
       வரும்படி விளைவுகள் நிறைத்திடவே
விரிகிற பொதுப்பணச் செலவையெல்லாம்
       வெட்டிச் சிக்கனம் தொட்டிடவும்       (தேசத்)6

பணத்தின் பெருமையைப் போக்கிவைப்போம்
       பண்டங் களின்விலை தூக்கிவைப்போம்
குணத்தின் பெருமைகள் இல்லாத
       குலமும் விறிதினிச் செல்லாது.       (தேசத்)7

மனிதனை மனிதன் ஏய்ப்பதையும்
       மக்களைப் போரில் மாய்ப்பதையும்
தனியொரு வழியில் தடுத்திடஓர்
       தருமம் உலகினில் தழைத்திடவே.       (தேசத்)8

சத்திய வாழ்வினை நாடுதற்கும்
       சாந்தப் பெருமைகள் கூடுதற்கும்
உத்தமக் காந்தியின் உபதேசம்
       உலகுக் கோதும் நம்தேசம்.       (தேசத்)9