சரணங்கள் மனிதப் பிறவிகளை மிருகங்கள் ஆக்கிவிட்ட மாச்சரி யங்களெல்லாம் மறையத்தன் தேகம்விட்ட புனிதப் பிறவியந்தப் புண்ணியன் காந்தி எண்ணம் போற்றுவ தேதவங்கள் ஆற்றுவ தாகும் திண்ணம். (பகை)1 ஆற்றி வுள்ளதென்று கூறும் மனிதர் குலம் அறிவைப் பறிகொடுத்துப் பகைமை வெறிபிடித்துச் சீறி விழுந்தழியும் சின்னத் தனம் ஒழியும் சிந்தையில் காந்தியைநாம் வந்தனை செய்துவரின், (பகை)2 கொஞ்சிக் குலவினர் அஞ்சிப் பதைப் பதைக்கக் கூடி வசித்தவரைத் தேடிக் கொலைபுரியும் நஞ்சிற் கொடியபகை நெஞ்சைவிட் டகன்றிட நல்லதுணை நமக்கு வல்லவன் காந்தியின் பேர். (பகை)3 83. கண்ணில் மறைந்து கருத்தில் நிறைந்தவர் பல்லவி கண்ணில் மறைந்து மக்கள் கருத்தில் நிறைந்துவிட்ட காந்தியை மறப்போமா. (கண்) அநுபல்லவி மண்ணில் மனிதர்குலம் எண்ணில் நலம் அடைய மார்க்கம் கொடுக்கும் இந்த தீர்க்க தரிசிகதை (கண்) சரணங்கள் உன்னும் பொழுதிலெல்லாம் உள்ளம் மகிழ்ச்சி பொங்கும் உண்மையின் அச்சமற்ற தன்மை நிலவித்தங்கும் பொன்னும் புகழும் பெற பொறுமை இழந்தலையும் புத்திக் குறைவுகளும் மெத்தத் திருந்தலுறும் (கண்)1 பேசும் பொழுதிலெல்லாம் ஈசன் நினைவு தரும் பேதைமை விட்டொழியும் பேரருள் கிட்டிவரும் |