புலவர் சிவ. கன்னியப்பன் 149

93.தெய்வத்தின் நாதம்

பல்லவி

காந்தியின் போதம் கருணைசங் கீதம்!

அநுபல்லவி

தேர்ந்திடில் அதுதான் தெய்வத்தின் நாதம்!       (காந்தி)

சரணங்கள்

ராகமும் தாளமும் ரகுபதி அமைப்பு
ரஸனையும் பாவமும் ராகவன் சமைப்பு
வேகமும் கதிகளும் வித்தைபர சண்டம்
விரவலும் பரவலும் விஸ்தார அண்டம்       (காந்தி)1

களைத்தவ ரெல்லாம் செழித்திடும் ஓசை
களித்தறம் மறந்தவர் விழித்திடும் பாஷை
களித்தவர் யாவரும் சிரித்திடும் பாட்டு
சூதர்கள் உள்ளமும் தீதறும் கேட்டு       (காந்தி)2

கல்வியும் கேள்வியும் களித்துளம் குளிரும்
கலைகளும் புதுப்புது கிளைதரத் துளிரும்
செல்வமும் வறுமையும் சேர்ந்துகொண் டாடும்
சிறுமையும் பெருமையும் செயல்மறந் தாடும்.       (காந்தி)3

குறிப்புரை:-சூதர்கள் - சூதாடுபவர்கள், புகழ்வோர்.

94. தேவருள் தெய்வம்

பல்லவி

மனிதருள் தேவன் தேவருள் தெய்வம்
காந்தியை மறக்காதே!

அநுபல்லவி

புனிதருள் புனிதன் பூமியின் விந்தை
பொய்யா நெறிப் புதுமை.       (மனித)