புலவர் சிவ. கன்னியப்பன் 153

இந்நிலத் துயரெல்லாம் தன்னலம் தருவது
இல்லாமை என்பதெல்லாம் ஈயாமல் வருவது
மன்னுயிர் வாழ்ந்திடத் துன்னுயிர் கொடுப்பது
மனிதர் குலத்துக்கெல்லாம் புனிதர்க்கே அடுப்பது       (தெய்)1

காவியும் உடுக்காமல் காட்டுக்கும் செல்லாமல்
கர்மத்தில் தனக்கென்றோர் கர்மமும் இல்லாமல்
பூவுலக கினில்மக்கள் துன்பத்தைப் போக்கிடப்
பொன்னுயிர் கொடுப்பவர் தன்னரும் பக்தரெனும்       (தெய்)2

சின்ன வயதுமுதல் தந்நலம் மறந்தவர்
தீமையுற் றவர்க்கெல்லாம் தாய்மையே புரிந்தவர்
இன்னுயிர் பிறர்வாழ விருப்புடன் ஈந்தவர்
இவரெனத் தியாகராஜன் இறைவனைச் சேர்ந்தவர்.       (தெய்)3

99. தமிழின் சாரம்

பல்லவி

தமிழ்மொழி சாரம் காந்தியின் தீரம்
தமிழா மறக்காதே!

அநுபல்லவி

அமிழ்தென நிரந்தரம் அறிவினை வாழ்த்திடும்
அன்பின் பணிபுரிந்தே அருளின் நெறிதெரிந்த
(தமிழ்)

சரணங்கள்

கொல்லா விரதமும் பொய்யாக் கொள்கையும்
குலமுறை அறம்எனக் கொடுப்பது தமிழே
எல்லா விதத்திலும் உலகம் கெட்டதெல்லாம்
இந்த இரண்டறத்தின் சிந்தனை விட்டதனால்.       (தமிழ்)1

தன்னுயிர் இழப்பினும் பிறஉயிர் அழிப்பதைத்
தவிர்ப்பது ஒன்றே தவங்களிற் சிறப்பெனச்
சொன்னதும் செய்ததும் தொடர்ந்ததைப் பணிவதும்
தொல்குலத் தமிழரின் நல்வழக் காகும்.       (தமிழ்)2