காமமும் கோபமும் கபடமும் நீங்கிக் கசடறக் கற்றதனை நடத்தையில் தாங்கி ஏமமும் ஜாமமும் ஈசனை வணங்கி எல்லாம் அவன் செயல் என்பதில் இணங்கும். (தமிழ்)3 100. இலக்கிய இலக்கணம் பல்லவி இலக்கணம் மிகப்புது இலக்கணம் பெற்றது இலக்கணம் புதியதோர் இலக்கியம் கற்றது எம்மான் காந்தியினால். அநுபல்லவி புலைக்குணம் மிகுந்துள பூமியைச் சீர்திருத்த புண்ணியர் பற்பலபேர் எண்ணி எழுதிவைத்த (இலக்) சரணங்கள் சத்தியம் தெய்வமென்று சாதித்த பேர்கள்உண்டு; சாந்தத்தைப் பற்றிநின்று போதித்த தீரர்உண்டு; உத்தமன் காந்தியைப் போல் மெத்தப் புதுமுறையில் உழைத்தவர் யாருமில்லை உலகில்இது வரையில் (இலக்)1 உயிரைத் திரணம் என்றே உண்மைக் குழைத்த துண்டு; உடலை மறந்து நன்மை ஊருக் கிழைத்த துண்டு; உயிரைப் பணயம்வைத்தே உலகுக் குதவிசெய்ய உரைசொல்லிச் சொன்னபடி உயிர்தந்த காந்திமெய்மையால் (இலக்)2 சொல்லில் இனிமைவார்த்துச் செயல்களில் சுத்தம்பார்த்துச் சொல்லுக்கும் செயலுக்கும் பேதம்வராமல் காத்துக் கல்லும் கனியச்செய்யும் காந்தியின் வாழ்க்கை யன்றோ கல்விக்கும் இலக்கியம் கருணைக்கும் இலக்கணம்? (இலக்)3 குறிப்புரை:-பேதம் - வேறுபாடு; பணயம் - ஈடாக வைத்த பொருள், அடகு |