தெய்வத் தமிழ் மொழியில் புதுமைகள் சேர்த்துத் தீரம் விளங்கச்சுத்த வீரமும் வார்த்து வையம் முழுதும்அதை வணங்கிடச் செய்யும் வாய்மையும் தூய்மையும்வளர்த்திடும் ஐயன்! (சுதந்)2 பெண்ணின் பெருமைகளைக் காத்திடும் கோட்டை பேதையர் என்பதைக் கடிந்திடும் சாட்டை உண்மை அறிவுகளை உணர்த்திடும் போதம் உத்தம தத்துவங்கள் ஒளித்திடும் கீதம்! (சுதந்)3 121. சுதந்தர தினம் பல்லவி விடுதலை அடைந்து விட்டோம் - உலகம் வியந்திடும் படிக்கொரு நயந்திகழ் விதத்தினில் (விடு) அநுபல்லவி நடுநிலை தாங்கிடும் நம்மர சோங்கிட நானிலம் முழுதுக்கும் ஞானப் பணிபுரிய (விடு) சரணங்கள் பாரதி மெய்ப்புலவன் வாக்குப் பலித்ததென பண்டுநம் தாதாபாய் கண்ட கனவிதென தீரன் திலகரிஷி த்யாகம் திகழ்ந்திடவும் தெய்விக காந்திதவம் வையம் புகழ்ந்திடவும். (விடு)1 அந்நியப் பிடிப்புகள் அகன்றத னால்மட்டும் ஆனந்த சுதந்தரம் அடைவது வெகுகஷ்டம் உன்னத லட்சியங்கள் ஓங்கிட வேண்டும்அதில் உத்தமன் காந்திவழி தாங்கிட வேண்டும்இனி. (விடு)2 கிடைத்த விடுதலையைக் கெடுத்து விடாதபடி கீழான ஆசைகட்குக் கொடுத்து விடாமல்இடம் அடுத்திடும் யாவரையும் அன்பின் வழிமதித்தே அகிலம் முழுதும்காந்தி அருளைப் பரப்புதற்கே. (விடு)3 குறிப்பு:-நானிலம் - குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருதநிலம், நெய்தல் நிலம். |