170நாமக்கல் கவிஞர் பாடல்கள்

122. நல்ல சமயம்

பல்லவி

நல்ல சமயமடா - இதை - நழுவவிடலாமோ!

அநுபல்லவி

நாட்டிற் சுதந்தரம் நாட்டி மனிதருள்
தீட்டுத்தீண் டாமையும் தீர்ந்து விடுதற்கு       (நல்ல)

சரணங்கள்

காந்தியைப் போல்தலைவர் - வந்தக் - காலத்திற்கிட்டுமடா?
வாய்ந்த தருணமிதை - நீ - வழுவியிழப்பாயோ?
சூழ்ந்திடும் துன்பங்கள் - வீழ்ந்திட நாமினி
வாழ்ந்திட வும்மனச் சாந்தி யடையவும்       (நல்ல)1

வேதம் ஒலிக்குதடா - காந்தி - ஓதும்மொழிகளிலே
கீதை ஜொலிக்குதடா - அவர் - செய்யும் கிரியையெல்லாம்
வேற்றுமை யில்லாமல் நாட்டின் நலத்தினைப்
போற்றின யாரையும் - கூட்டி உழைத்திட       (நல்ல)2

பண்டைய காலந்தொட்டு - நம்முள் - பாசம் பிடித்தபல
வண்டை வழக்கங்களை - இனி - வாரியெறிந்துவிட்டு
பத்தி வளர்த்தினிச் - சுத்த வழிகளில்
நத்தி அனைவரும் - ஒத்துச் சுகித்திட.       (நல்ல)3

123. சாந்தியே காந்தி

பல்லவி

சாந்தியின் விரிவுரை காந்தியின் சரித்திரம்
தமிழா மறவாதே.

அநுபல்லவி

தேர்ந்தவர் ஞானமும் தெளிந்தவர் மோனமும்
செந்தமிழ் நூல்களெல்லாம் சந்ததம் கோருகின்ற       (சாந்தி)