புலவர் சிவ. கன்னியப்பன் 17

இருப்பதென்பார் ருசுப்படுத்த
       இல்லாத தும்அதுவாய்
அல்லவென்று மறுப்பதிலும்
       அங்கிருந்து பேசுவதாய்
ஆம்என்ற மாத்திரத்தில்
       அறிந்துவிட முடியாதாய்
வல்லமென்று அகங்கரித்தால்
       பலங்குறைக்கும் வல்லமையாய்
வணங்கி அதைத் தொழுவார்க்கு
       வலுவில்வரும் பெருந்துணையாய்ச்
சொல்லையொத்துச் செயல்மனமும்
       தூயவர்க்கே தோற்றுவதாய்ச்
சொல்வதற்கு முடியாத
       சக்திதனைத் தொழுதிடுவோம்.

5, சூரியன் வருவது யாராலே?

சூரியன் வருவது யாராலே?
       சந்திரன் திரிவதும் எவராலே?
காரிருள் வானில் மின்மினிபோல்
       கண்ணிற் படுவன அவைஎன்ன?
பேரிடி மின்னல் எதனாலே?
       பெருமழை பெய்வதும் எவராலே?
யாரிதற் கெல்லாம் அதிகாரி?
       அதைநாம் எண்ணிட வேண்டாவோ?       1

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்
       தரையில் முளைத்திடும் புல்ஏது?
மண்ணில் போட்டது விதையொன்று
       மரஞ்செடி யாவது யாராலே?
கண்ணில் தெரியாச் சிசுவை எல்லாம்
       கருவில் வளர்ப்பது யார்வேலை?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
       ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ?       2