எத்தனை மிருகம்! எத்தனைமீன்! எத்தனை ஊர்வன பறப்பனபார்! எத்தனை பூச்சிகள் புழுவகைகள்! எண்ணத் தொலையாச் செடிகொடிகள்! எத்தனை நிறங்கள் உருவங்கள்! எல்லா வற்றையும் எண்ணுங்கால் அத்தனை யும்தர ஒருகர்த்தன் யாரோ எங்கோ இருப்பதுமெய். 3அல்லா வெண்பார் சிலபேர்கள் அரன்அரி என்பார் சிலபேர்கள்; வல்லான் அவன்பர மண்டலத்தில் வாழும் தந்தை யென்பார்கள் சொல்லால் விளங்கா "நிர்வாணம்" என்றும் சிலபேர் சொல்வார்கள்; எல்லா மிப்படிப் பலபேசும் ஏதோ ஒருபொருள் இருக்கிறதே! 4 அந்தப் பொருளை நாம்நினைத்தே அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம் எந்தப் படியாய் எவர்அதனை எப்படித் தொழுதால் நமக்கென்ன? நிந்தை பிறரைப் பேசாமல் நினைவிலும் கெடுதல் செய்யாமல் வந்திப் போம்அதை வணங்கிடுவோம்; வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம். 5 6, தேவி பராசக்தி நூறென்று மனிதர்க்கு நீதந்த வயசினில் கூறென்று பலநோய்கள் பங்கிட்டுக் கொள்ளுதையோ? ஆரெம்மைக் கரப்பவர் அன்னையே உன்னையன்றி? பாரெம்மைக் கடைக்கண்ணால் தேவி பராசக்தி!
|