வட்டிபெ ருக்கி ஏழைகளின் வாழ்வு கெடுத்தவன் சண்டாளன்; பட்டினி எளியவர் ஆசையுடன் பார்த்திட உண்பவன் சண்டாளன்; ஒட்டிய வழக்கில் பணத்திற்கா ஓரஞ் சொன்னவன் சண்டாளன்; அட்டியில் லாமல் சொன்னதெலாம் அடியேன் கேட்டேன;் அதற்காக (நானோ)7 தானங்கொடுப்பதைத் தடுப்போனும் தவத்தைப் பழிப்பவன் சண்டாளன்; மானங் கெடுத்தவர் சோறுண்டு வயிறு வளர்ப்பவன் சண்டாளன்; கானுங் காடும் உங்களுக்கா கல்லிலும் முள்ளிலும் பாடுபடும் ஏனிங் கென்னைச் ‘சண்டாளன்‘ என்பது? சரியோ உங்களுக்கே? (நானோ)8 131. கேள்விகள் பல்லவி கதர்த்துணியுடுத்தச் சித்தமில் லாதநீ கத்தி யெடுத்தென் செய்குவாய்? அநுபல்லவி பித்தரைப்போலவே மெத்தப் பிதற்றுகின்றாய் சற்று நினைத்தே உய்குவாய் (கதர்) சரணங்கள் கள்ளுக்கடைகளிலே உள்ளம் மயங்கினநீ கஷ்டங்கள் சகிப்பாயோ! வெல்லும் சமர்க்களத்தில் கொல்லெனமுன்னின்று வீரமும் வகிப்பாயோ! (கதர்)1 |