புலவர் சிவ. கன்னியப்பன் 179

நன்றிமறந்தவன் சண்டாளன்;
       நயமுரை வஞ்சகன் சண்டாளன்;
கொன்று சுகித்தவன் சண்டாளன்;
       கோப மிகுந்தவன் சண்டாளன்;
கன்று நலிந்திடப் பாலெல்லாம்
       கறந்து புசித்தவன் சண்டாளன்;
ஒன்றும் தெரியேன் "ஏழை" எனும்
       ஒன்றே என்குறை; அதற்காக       (நானோ)3

கள்ளைக் குடிப்பவன் சண்டாளன்;
       காமத் தலைவன் சண்டாளன்;
கொள்ளை அடிப்பவன் சண்டாளன்;
       கூடிக் கெடுப்பவன் சண்டாளன்;
‘அள்ளித் தெறிக்கா‘ப் பணக்காரன்
       ஆபத் துதவான் சண்டாளன்
வெள்ளைத் துணியொன் றில்லாமல்
       வேலைசெய்வேன்; அதற்காக       (நானோ)4

தெய்வமிகழ்ந்தவன் சண்டாளன்;
       தீனரைக் கெடுத்தவன் சண்டாளன்;
பொய்யுரை பேசிப் பிறர்கேடே
       புரிந்து பிழைப்பவன் சண்டாளன்;
‘ஐயா அடைக்கலம்‘ என்றோரை
       ஆதரிக் காதவன் சண்டாளன்;
வெய்யில் மழையென் றில்லாமல்
       வேண்டிய செய்வேன்; அதற்காக       (நானோ)5

ஆலயத் துள்ளே அபசாரம்
       அறிந்தே புரிந்தவன் சண்டாளன்;
கூலியை மறைத்தவன் சண்டாளன்;
       கோள்சொலிப் பிழைப்பவன் சண்டாளன்;
வேலியைக் கடந்தே பிறன்பயிரை
       வேண்டுமென் றழித்தவன் சண்டாளன்;
காலையும் மாலையும் இல்லாமல்
       கஷ்டப் படுவேன் கள்ளமிலேன்.       (நானோ)6