மனமுவந்திங் குயிர்கொடுத்த மானமுள்ள வீரர்கள் மட்டிலாத துன்பமுற்று நட்டுவைத்த கொடியிது! தனமிழந்து கனமிழந்து தாழ்ந்துபோக நேமம் தாயின்மானம் ஆனஇந்தக் கொடியை யென்றும் தாங்குவோம்!(கொடி)4 130.நானோ சண்டாளன்! சண்டாளன் என்று விலக்கப்பட்டவன் கேள்வி பல்லவி நானோசண்டாளன்! - சரி தானோ உங்களுக்கு? சரணங்கள் தாயை யிகழ்ந்தவன் சண்டாளன்; தந்தையை நொந்தவன் சண்டாளன். தூயவர் நல்லோர் பெரியோரைத் தோஷ முரைத்தவன் சண்டாளன்; தீயவை செய்தே பலர்ஏசத் தின்றுழல் கின்றவன் சண்டாளன் ஏவின செய்வேன் குற்றமிலேன் எளியவ னானேன் என்பதற்கே. (நானோ)1 வீட்டைமறந்தவன் சண்டாளன்; வேசியர்க் கலைபவன் சண்டாளன்; நாட்டைக் காட்டிக் கொடுத்ததனால் லாப மடைந்தவன் சண்டாளன்; பாட்டைத் தனிவழி வந்தோரைப் பதுங்கி யடிப்பவன் சண்டாளன்; ஓட்டைக் குடிசையில் வாழ்கின்றேன் ஒருசிறு பாபமும் அறியாத (நானோ)2 |