182நாமக்கல் கவிஞர் பாடல்கள்

133.தமிழன் பாட்டு

பல்லவி

தமிழனென்று சொல்லடா!
தலைநி மிர்ந்து நில்லடா!       (தமிழ்)

சரணங்கள்

அமுத மூறும் அன்பு கொண்டிங்
              கரசு செய்த நாட்டிலே
       அடிமை யென்று பிறர்ந கைக்க
              முடிவ ணங்கி நிற்பதோ!
இமயம் தொட்டுக் குமரிமட்டும்
              இசைப ரந்த மக்கள்நாம்
       இனியும் அந்தப் பெருமை கொள்ள
              ஏற்ற யாவும் செய்குவோம்.       (தமிழ்)1

குஞ்சைக் காக்கும் கோழி போலக்
              குடியைக் காத்த மன்னர்கள்
       கோல்நடந்த அச்சமின்றி
              மேல்நி னைப்புக் கொண்டநாம்
பஞ்ச பூத தத்து வங்கள்
              பக்தி யோடு முக்தியைப்
       பார்சி றக்கச் சொன்ன நாமும்
              சீர்கு றைந்து போவதோ?       (தமிழ்)2

உலகி லெங்கும் இணையி லாத
              உண்மை பாடும் புலவர்கள்
       உணர்ச்சி தன்னை வானைத் தாண்டி
              உயரச் செய்யும் நாவலர்
கலக மற்றுக் களிசி றக்கக்
              கவிதை சொன்ன நாட்டிலே
       கைகு வித்துப் பெயர்கள் பாடிக்
              காலந் தள்ளல் ஆகுமோ?       (தமிழ்)3