புலவர் சிவ. கன்னியப்பன் 183

கங்கை யோடு பெருமை கொண்ட
              காவி ரிப்பொன் னாட்டிலே
       கவலை யின்றிச் சோறி ருக்கக்
              கலைக ளெண்ணி வாழ்ந்த நாம்
மங்கி மங்கி வறுமை மிஞ்ச
              மதிமயங்கி மாய்வதோ!
       மாநி லத்தில் சோற்றுப் பஞ்சம்
              மறையு மாறு மாற்றுவோம்.       (தமிழ்)4

சித்தி ரத்தில் மிகஉ யர்ந்த
              சிற்ப நூலின் அற்புதம்
       சின்னச் சின்ன ஊரிற் கூட
              இன்னு மெங்கும் காணலாம்;
கைத்திறத்தில் ஈடிலாத
              கல்வி தந்த தமிழர்நாம்
       கைந்நெறித்து வேலை யின்றிக்
              கண்க லங்கி நிற்பதேன்?       (தமிழ்)5

எண்ண மற்றும் விசன மற்றும்
              எங்கும் செல்வம் பொங்கவே
       எந்த நாளும் ஆடல் பாடல்
              எழில ரங்கம் ஓவியும்
பண்ண மைந்த குழலும் யாழும்
              பக்க மேளம் யாவையும்
       பாருக் கீந்து மகிழ்ச்சி யின்றி
              நாமி ருத்தல் பான்மையோ!       (தமிழ்)6

விண்ம றைக்கும் கோபுரங்கள்
              வினைம றக்கும் கோயில்கள்
       வேறு எந்த நாட்டி லுண்டு
              வேலை யின்வி சித்திரம்?