நாணோடு கோணாத பணிசெய்து நின்றே சமமாக எல்லாரும் நல்வாழ்வு பெறவே சரியான வழிகாண உபகாரம் அதுவாம். (புது)1 புவிமீது வெகுகாலம் புகழோடு நின்றோம் புலவர்கள் துதிபாடும் பெருவாழ்வு கண்டோம் தவமாதி அறமான தரணிக்குத் தந்தோம் தலையாய கலைவாணர் வமிசத்தில் வந்தோம். அவமானம் மிகுகின்ற அடிமைத் தனத்தால் அநியாய சிறுமைக்குள் அடைபட் டிளைத்தோம் நவஜீவன் அதுசேர புதுவீறு கொள்வோம் ‘நாமார்க்கும் குடியல்லோம்‘ எனுமாறு சொல்வோம். (புது)2 அதிகாலை எழுகின்ற கதிரோன்தன் உறவால் அலர்கின்ற மலர்போல புதுவாழ்வு பெறுவோம் புதிதான உணர்வோடும் உலகத்தில் எங்கும் புலனாகும் கலையாவும் நிலையாக இங்கும் விதிகூட வழிவிட்டு விலகிற்று எனவே |