186நாமக்கல் கவிஞர் பாடல்கள்

விதமாக விதமாக
       விரிகின்ற நினைவால்
இதமாக எல்லாரும்
       இனிதாக வாழ்வோம்
என்கின்ற கலைசொல்லும்
       மன்றங்கள் சூழ்வோம்.       (புது)3

மரணத்தில் அஞ்சாத
       மனவீரம் வேண்டும்
மனதுக்குள் மருளாத
       மதிசாந்தம் வேண்டும்
இரணத்தை எண்ணாமை
       எவருக்கும் வேண்டும்
இழிவான மொழிபேசிக்
       களியாமை வேண்டும்
திரணத்தின் அளவாகப்
       போகங்கள் எண்ணித்
தேசத்தின் பொதுவாழ்வின்
       சேவைகள் பண்ணும்
அரண்ஒத்த நிலையான
       அறமின்னும் வளர
அறிவான புதுவாழ்வு
       வரவேணும் குளிர.       (புது)4

அறிவோடும் திறனோடும்
       அன்போடும் கூடி
அருளொடும் உறவான
       புதுவாழ்வை நாடி
செறிவோடு நிறைவாக
       இந்நாட்டில் யாரும்
சிறுவாழ்வு இதுபோக
       பெருவாழ்வு சேரும்
துறவோடு பொதுவாழ்வின்
       துயர்நீங்க மிக்கத்