196நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தவணைக்குள் கடன்தீர்க்கத் தவறும் என்றால்
       தானேபோய்க் காரணத்தின் விவரம் சொன்னால்
கவனிப்பார் கடன் கொடுத்தோர் கடுக்க மாட்டார்;
       காலத்தை நீட்டிடவும் தடுக்க மாட்டார்;
அவராகக் கடன்கொடுத்தோர் அதட்டிக் கேட்கும்
       அந்தநிலை நாணயத்தை அழிப்பதாகும்
தவணைக்குள் வட்டிமுற்றும் கட்டினாலும்
       கடன்வாங்கும் தகுதிசற்றும் கெட்டி டாது.       2

142. உலகப் போக்கு

உலகப் போக்கைப் பாருங்கள்
       ஊரைக் காக்கச் சேருங்கள்
கலகப் பேய்பு குந்திடும்
       கவலை யேமி குந்திடும்       (உலக)1

அடிமை வாழ்வு விட்டுநாம்
       ஆண்மை வாழ்வு கிட்டினோம்
கடமை யோடும் எல்லையைக்
       காக்க வேண்டும் அல்லவா?       (உலக)2

நாடு முற்றும் நம்மது
       நன்மை தீமை நம்மது
வீடு பெண்டு மக்களை
       வேறு காக்கத் திக்குயார்?       (உலக)3

படைஎ டுக்கும் யாரையும்
       பயமு றுத்து வோரையும்
நடுந டுங்கச் செய்குவோம்
       நாட்டை மீட்டு உய்குவோம்.       (உலக)4

சாந்த வாழ்வை மிஞ்சிடோம்;
       சாவ தற்கும் அஞ்சிடோம்;
மாந்த ருக்குள் பீதியை
       மாற்ற வேண்டும் பீதியால்       (உலக)5