198நாமக்கல் கவிஞர் பாடல்கள்

காட்டிலும் மேட்டிலும் களைப்போடு
       கஷ்டப் படுவோர் உழைப்பின்றி
வீட்டினில் சாதம் வெந்திடுமோ?
       வேறெதும் உணவைத் தந்திடுமோ?       (கை)3

நெசவுக் காரர்கள் நெய்யாமல்
       நிலத்தவர் உடைக்கென் செய்வார்கள்?
குசவன் செய்திடும் பாண்டமன்றோ
       குடித்தனம் நடந்திட வேண்டுமென்றும்?       (கை)4

கொல்லரும் தச்சரும் கூடாமல்
       கூடமும் மாடமும் வீடாமோ?
கல்லடி சிற்பியும் தச்சருமே
       காரியம் பலவினுக் கச்சாணி       (கை)5

சலவை சவரம் செய்தாலும்
       சாக்கடை கழுவுதல் செய்தாலும்
உலகுக் கதனால் உபகாரம்
       ஒன்றும் தெரியார் வெறும்பாரம்.       (கை)6

வேந்தர்கள் வரிப்பணம் வாங்குவதும்
       வீரர்கள் வெற்றிகள் தாங்குவதும்
மாந்தர்கள் செய்யும் எத்தொழிலும்
       மண்ணில் சிறப்பதும் கைத்தொழிலால்       (கை)7

எந்திர வேலைகள் சிறந்திடவும்
       ஏற்றவன் கைத்தொழில் தெரிந்தனவே;
மந்திரத் தால்எதும் வந்திடுமோ?
       மனிதன் செய்ததே எந்திரமும்.       (கை)8

வேலையில் லாதவர் திண்டாட்டம்
       விளைத்திடும் கலகக் கொண்டாட்டம்;
ஆலைகள் எந்திரச் சாலைகளால்
       அதிகப் படுவதை அறிவோமே.       (கை)9