காமக் கடுங்குறும்பே! - நெற்றிக் கண்ணை யடைந்து விட்டேன் தாமதம் செய்வாயேல் - வெந்து சாம்பல் கதியடைவாய்! 3 கோபக் கொடுங்குணமே! - உன்றன் கொட்டம் அடக்கிடுவேன் தாபத்துக் கெட்டாத - தெய்வ சன்னதி என்னதுபார்! 4 சோம்பல்எனும் பிணியே! - உன்றன் சொந்தத்தை விட்டுவிட்டேன். தேம்பித் திரிபவரை - இனித் தேடிப் பிடித்துக் கொள்ளு. 5 அச்சம்எனும் பகையே! -இனி அண்டையில் நிற்பாயா? பச்சைக் குழந்தையைப்போல் - மனப் பான்மை யடைந்துவிட்டேன். 6 ஆசைமனக் குரங்கே - உன்றன் ஆட்சி ஒழிந்தது பார்? காசு பணங்களெல்லாம் - வெறும் காகிதக் குப்பை கண்டேன். 7 சூதுபொய் வஞ்சனைகாள்!- உங்கள் சூழ்ச்சி பலிக்காது! நீதிமெய் நேர்மைகளே - கொண்ட நிச்சய ஞானமுற்றேன். 8 வெற்றிஎனும் வெறியே! உன்னை வென்று விழுங்கிவிட்டேன்! மற்றொரு யாரினிமேல் - என் மனத்தைக் கலைத்திடுவார்? 9 |