புலவர் சிவ. கன்னியப்பன் 201

ஆலைகள் மறுத்தலும் வேலைகள் நிறுத்தமும்
       அங்கே அடைந்திடும் தொழிலாளர்
சாலையை வளைப்பதும் சங்கடம் விளைப்பதும்
       சத்தியம் கைத்தொழில் குறைந்த தனால்       (கை)6

ஆதலி னால்ஒரு போதனை கொள்ளுவாய்
       அன்புரை இன்பத் தமிழ்மகனே!
வேதனை கள்பல போதலை விரும்பிடின்
       விதியெனக் கைத்தொழில் விருத்திசெய்வாய்.       (கை)7

பற்பல பொருள்களை அற்புத யந்திரம்
       படைப்பதைத் தடுப்பது பழியெனினும்
சிற்சில பொருள்களை முற்றிலும் கையால்
       செய்திடச் சட்டம் செய்திடுவாய்.       (கை)8

சோறும் துணியும் யாரும் இனிமேல்
       சுத்தமும் கைத்தொழில் பொருள்வாங்கக்
கூறும் சட்டக் கட்டளை யின்றேல்
       கொடுமையும் பஞ்சமும் குறையாவே.       (கை)9

பஞ்சம் குறைந்திட வஞ்சம் மறைந்திட
       பட்டினி கிடப்பவர் இல்லாமல்
அஞ்சும் படிபல ஆயிரம் ஜனங்களை
       ஆலையில் அடைப்பதை அளவாக்கும்.       (கை)10

146. தேறிய தெளிவு

துன்பம்எனும் பேயே! - நீ
       தூரத் தொலைந் தொழிவாய்
இன்பத்தைக் கண்டு கொண்டேன் - உனக்கே
       இங்கென்ன வேலையினி?       1

துக்கம்எனும் இருட்டே! - ஞான
       சூரியன் தோன்றி விட்டான்
பக்கம் வருவதற்கும் - இனிப்
       பாத்தியம் ஏதுனக்கு?       2