204நாமக்கல் கவிஞர் பாடல்கள்

148. சொல்லின் பெருமை

பேச்ச ழிந்து போனால் - அறிவின்
       பெருமை என்ன வாகும்?
மூச்சி ழக்கு மானால் - தேகம்
       முன்னி ருந்த தாமே?
கூச்ச மில்லை யென்றால் - பெண்மை
       குறைவு பட்ட தன்றோ?
நீச்ச மற்ற மீன்போல் - சமூகம்
       நிலைகு லைந்து போகும்.1

சொன்ன சொல்ல ழிந்தால் - வாழ்க்கை
       சுகமி லாத தாகும்.
சின்ன ஏழைக் கேனும் - சொல்லே
       ஜீவ நாடி யாகும்.
மன்ன ரான பேரும் - பேச்சை
       மாறி மீறி விட்டால்
சின்ன பின்ன மாவார் - அதிலே
       சிறிதும் ஐய மில்லை.       2

வாக்க ழிந்து விட்டால் - பின்னர்
       வாழ்வு தாழ்வ தாகும்
மூக்க றுந்து போனால் - நல்ல
       முகவி லாச மெங்கே?
நோக்கி லாது போனால் - கண்கள்
       நோகும் புண்க ளாகும்
காக்க வேணும் சொல்லை - அதுவே
       கர்ம வீர மாகும்.       3

வார்த்தை மாறி விட்டால் - மனிதன்
       வாசம் அற்ற மலரே.
கீர்த்தி யென்ப தெல்லாம் - சொல்லில்
       கெட்ட பேருக் கேது?