புலவர் சிவ. கன்னியப்பன் 205

பூர்த்தி தவறி னாலும் - வாக்கில்
       புரட்டு செய்தி டாமை
நேர்த்தி யான தாகும் - என்று
       நினைவில் வைக்க வேணும்.       4

149. அச்சமில்லாமை

அச்சமில் லாமை அஃதுஎது என்றால்
இச்சைப் படிக்கே எதையும் செய்யச்
சுதந்தரம் தனக்குச் சொந்தமாய் நிற்கக்
குணமே நாடிக் குற்றம் கடிந்து
தன்னைத் தானே தண்டிப் பவனாய்.       5

ஏவல் சொல்லவும் ஏனென்று கேட்கவும்
தன்மனச் சாட்சியே தனக்குத் தலைவனாய்
பதுங்கிக் கொள்ளப் பகையில் லாமல்
நடுங்க வேண்டிய ஞாயமில் லாமல்
தண்டனை பயக்கும் தப்பித மென்னத்       10

திடுக்கிடச் செய்யும் தீமைபண் ணாமல்
வாய்மையும் தூய்மையும் வழுவா நெறியில்
அனைத்துள உயிர்க்கும் அன்பே செய்தும்
அருள்மனம் நிறைந்த அமைதி ஒன்றே
அச்சமில் லாமை அளிக்க வல்லது.       15

அச்சமில்லாமை அரும்பெரும் செல்வம்
அப்படிப் பட்டதோர் அச்சமில் லாமை
காந்தி மகானிடம் மட்டும் காண்கிறோம்.

150. ராம ராஜ்யம்

ஏ! ராம ராம!வென ஜெபிப்போ ரெல்லாம்
       ஏமனெனும் பயம் அணுகா இன்பம் சூழ்வார்
மாராமன் திருப்புகழைச் சொல்வோ ரெல்லாம்
       மாருதிபோல் அவனருளின் மகிழ்ச்சி ஆள்வார்.