208நாமக்கல் கவிஞர் பாடல்கள்

நாதி யற்றுப் போகுமிந்த
       நானி லத்தின் மீதிலே
ஆதிநாள்நம் அன்னை செய்த
       அன்பை எண்ணும் போதிலே       2

அன்பு கொண்ட பேர்களுக்கே
       அச்ச மில்லை எங்கணும்
முன்பு யாரும் கண்டிராத
       மூர்க்க ரோடும் தங்கலாம்.
துன்ப முற்ற மக்கள்யாரும்
       துணைவ ரென்று போற்றவே
செம்பு கொண்ட தங்கமென்ன
       சேர்ந்த தீமை மாற்றுவார்.       3

வெல்ல வந்த சேனைகூட
       வேகமற்ற தாகுமே
சொல்லுமிந்த அன்பை மட்டும்
       சுத்த மாகப் பேணினால்
கொல்லும் வேலும் வாளுங்கூடக்
       கூர்ம ழுங்கிப் போகுமே
கல்லும் கூடப் புல்லைப்போலக்
       கனிவு கொண்டு காணுமே
சொல்லுமிந்த அன்பை மட்டும்
       சுத்த மாகப் பேணினால்.       4

கூழுமின்றிக் குடிசையின்றிக்
       கோடி கோடி உலகினில்
ஏழை மக்கள் பரதவித்தே
       ஏங்க நேரும் கலகமும்
கோழைப் பட்ட செல்வம் செய்யும்
       கொடுமை முற்றும் குறையுமே
வாழி இந்த அன்புமட்டும்
       வைய மெங்கும் நிறையுமே.       5