தெய்வ மென்று உலகம்நித்தம் தேடு கின்ற ஒன்றுதான் வைய கத்தில் அன்பா மென்ற வார்த்தை யாகி நின்றதே ஐயன் எங்கள் காந்தி வாழ்வின் அற்புத தத்தை நாடியே மெய்யு ணர்ந்தே அன்புசொல்லும் மேன்மை யாவும் கூடுவோம். 10 153. தியாக புத்தி போகம் மிக்க இன்ப வாழ்வை புவியி லெங்கும் நாட்டலாம் பொறுமை போக்கும் வறுமை தன்னைப் பூமி விட்டே ஓட்டலாம் சோக முற்று வாடு மக்கள் சுகம டுக்கப் பண்ணலாம் சூது வாது பொய்கள் விட்டுச் சுத்த மாக்க எண்ணலாம் வேக மூட்டும் ‘பகைமை‘ யென்னும் வெறியை முற்றும் போக்கலாம் வேறு ஜாதி சமயம் என்னும் வெட்டிச் சண்டை நீக்கலாம் ‘தியாக புத்தி‘ ஒன்றை மட்டும் சிறிது நாமும் போற்றினால் தெய்வ லோகம் நாண இந்த வைய கத்தை மாற்றலாம். 1 அடிமை யென்ற சொல்லுங் கூட அவனி விட்டு ஓடுமே ஆணும் பெண்ணும் சமதை யென்ற அறிவு வந்து கூடுமே |