218நாமக்கல் கவிஞர் பாடல்கள்

வந்த தீமை தப்பி வாழ
       வழியைத் தேடி மாநிலம்
சிந்தை நொந்து மனித வாழ்வு
       சீர்கு லைந்து போனதே.       4

உலகில் உள்ள மக்கள் யாரும்
       ஒருகு டும்ப மாகவே
கலக மற்று யுத்த மென்ற
       கவலை விட்டுப் போகவே
குலவி வாழ இந்த நாட்டின்
       கொள்கை யாகும் சாந்தியே
சுலப மான மார்க்க மென்று
       சுத்த மாக ஏத்துவோம்.       5

உயிரி ருக்கும் உடல னைத்தும்
       ஈசன் வாழும் உறையுளாம்
அயர்வி லாத ஞான மூட்டும்
       அருளறிந்த அறிவுளோம்
பெயர்ப டைத்த நமது நாட்டின்
       பெருமை யாகும் மந்திரம்
துயர றுக்கும் ‘சாந்தி‘ சொல்லித்
       தொண்டு செய்ய முந்துவோம்.       6

குறிப்புரை:-வெள்கி - அஞ்சி, கூசி.

159. புத்தாண்டு வாழ்த்துகள்

புகுந்தது நமது வாழ்வில்
              புதியதோர் ஆண்டிந் நாளே
       பூசனை புரிந்து போற்றி
              ஈசனை வணங்கி நிற்போம்.
உகுந்திடும் தீமை யாவும்
              ஒழிந்திடும் துன்ப மெல்லாம்
       உயர்ந்திடும் நிலைமை; கீர்த்தி
              ஓங்கிடும்; காரி யத்தில்