துன்பெனும் துர்நீர் சுண்டித் தொலைந்திடக் காய்ச்சித் திரட்டிய கருணைப் பொங்கல் பாய்ச்சும் சுதந்தரப் பரிமளம் கமழ 10 அமிழ்தம் இதுவென அழியா வரந்தரும் தமிழன் தெய்விகத் தனிரசம் சேர்த்துப் புத்தம் புதியதோர் சுவைதரப் புசித்து நித்தமும் மகிழ்வுடன் நெடுநாள் வாழ்வீர்! 14 குறிப்புரை:- பரிமளம் - மிகுமணம்; மமதை - எனது என்ற மமதை. 163. பொங்குக புதுவளம் பொங்குக பொங்கல் பொங்குகவே பொங்குக புதுவனம் பொங்குகவே திங்களில் மும்முறை மழைபொழியத் தினம்இது முதல்நம் குறைஒழிய மங்குக போர்வெறி மாச்சரியம் மதவெறி நிறவெறி தீச்செயல்கள் தங்குக சத்திய சன்மார்க்கம் தரணியில் மாந்தர்கள் எல்லார்க்கும். (பொங்)1 மாநில உயிர்கள் நலமுறவும் மக்கள் உடல்வளம் பலமுறவும் ஞானமும் கல்வியும் சிறந்திடவும் நல்லன உணர்ச்சிகள் நிறைந்திடவும் தானியக் கதிர்வளம் உயர்ந்திடவே தக்கன உழவுகள் முயன்றிடுவோம் போனதிங் குணவுப் பஞ்சமெனப் புதுவளம் எங்கணும் மிஞ்சிடவே (பொங்)2 இயற்கையின் வளம்பல இருந்தாலும் இன்பம் யாவையும் பொருந்தாவாம் செயற்கைப் பொருள்கள் சேராமல் சிறப்புள வாழ்வெனும் பேராமோ? |