வியக்கும் பொருள்களைச் செய்திடுவோம் வேண்டிய திறமைகள் எய்திடுவோம் நயக்கும் தொழில்பல பெருகவென நமக்கதில் ஊக்கம் வருகவென. (பொங்)3 உழவும் தொழிலும் மலிந்துவிடில் ஊரில் செல்வம் பொலிந்துவிடும் விழவும் தினந்தினம் விருந்துகளும் வீட்டிலும் நாட்டிலும் இருந்துவரும் பழகும் அன்னிய நாடுகளும் பரிவுடன் எதையும் ஈடுதரும் செழுமை பெற்றிடும் வாணிபங்கள் சேமித் திடுவோம் நாணயங்கள். (பொங்)4 பொலிவுறச் செல்வம் சேர்ந்தவுடன் புதுப்புது உணர்ச்சிகள் ஊர்ந்துவரும் இலக்கிய வாழ்க்கையில் இச்சைதரும் இன்பச் செயல்களை மெச்சவரும் நலிதரும் ஆசையை ஓட்டுவதாய் நன்னெறி இன்பம் ஊட்டுவதாய்க் கலைகள் யாவையும் திகழ்ந்திடவும் கண்டவர் கேட்டவர் புகழ்ந்திடவும் (பொங்)5 கொள்ளை கொள்ளை தானியமும் கோரும் பலதொழில் மானியமும் வெள்ளிபொன் செல்வம் மிகுந்திடினும் வேண்டிய கலைத்திறம் திகழ்ந்திடினும் கள்ளமும் பொய்யும் அமிழ்ந்திடவும் கருணை நறுமணம் கமழ்ந்திடவும் உள்ளம் மலர்ந்திடல் இல்லாமல் உன்மை வளமெதும் நில்லாது. (பொங்)6 |