தனிநாயகன்ஒரு பரம்பொரு ளால் தரணியை ஆள்வதும் அவன் அருளாம் மனநா யகம்இதில் மலர்ந்துவிடில் மற்றுள வேற்றுமை உலர்ந்து விடும் ஜனநா யகமுறை ஓங்கிவிடும் சச்சர வென்பன நீங்கிவிடும் இனமாய் யாவரும் வாழ்ந்திடலாம் இன்பப் புதுவளம் சூழ்ந்திடவே! 7 குறிப்புரை:- சச்சரவு - கலகம், சண்டை; பரிவு - அன்பு, இன்பம்; தரணி - உலகம் 164, தமிழர் கண்ட பொங்கல் ஏர்தரும் விளைபொருள் யாவையும் நிறைந்தே ஏழைகள் படுந்துயர் எங்கணும் குறைந்து போர்வெறிக் கொடுமைகள் புரிவதை மறந்து பொய்நெறி விடுத்தறம் மெய்ந்நெறி சிறந்து சீர்தரும் கல்வியும் கலைகளும் செழிக்கச் செம்மையும் இன்பமும் நாடடினில் கொழிக்கப் பார்புகழ் உழவினைப் பணிந்திட என்றே பண்டைய தமிழர்கள் கண்டதிப் பொங்கல். 1 வேறு பொங்குக பொங்கல் பொங்கிட இன்பம் ஏரைத் தொழுதால் சீரைப் பெறலாம் என்பதைப் புகட்டும் இங்கிதப் பொங்கல் நன்னாள் ஆகிய இந்நாள் தொடங்கிக் கோழை படாத மேழிச் செல்வம் வேண்டிய மட்டிலும் வீட்டில் நிறைந்தே இன்பம் குறையா இல்லறம் நடத்தி |