மனைவியும் மக்களும் மற்றுள சுற்றமும் குலவிட உங்கள் குடித்தனம் சிறந்து காந்தியை எண்ணிக் கடவுளை நம்பிச் சத்திய சாந்த சன்மார்க்க நெறியில் பல்லாண்டு வாழ்வீர் பரமன் அருளும். 2 வேறு பொங்கி வழிந்திடும் அன்போடு பொங்கல் திருநாள் கொண்டாடி திங்கள் மும்மாறி பொழிந்திடவும் தீமைகள் யாவும் ஒழிந்திடவும் எங்கும் மாந்தர்கள் எல்லாரும் ஏதொரு குறையும் இல்லாமல் இங்கித முற்றிட வேண்டுமென ஈசன் மலரடி பூண்டிடுவோம். 3 ஏரைத் தொழுதால் சீராகும் என்கிற அறிவே நேராகும் பாரில் இதனை மறந்ததனால் பஞ்சம் என்பது நிறைந்ததுவே. ஊரும் நாடும் உயிர்வாழ்தல் உழவன் காக்கிற பயிர்வாழ்வால் தேரும் படிவரும் ஒருநாளே தெய்விகப் பொங்கல் திருநாளாம். 4 வேலும் போரும் வெற்றிகளும் வேறுள எவ்வித பெற்றிகளும் சீலம் மிக்குள உழவேபோல் சேமம் தருகிற தொழிலாமோ? பாலும் நெய்யும் பசுவாலே பகடுகள் எருதின் இசைவாலே சாலும் உழவும் சரியானால் சங்கடப் பஞ்சம் வருமோ தான்? 5 8 நா.க.பா.பூ.வெ. எ. 489 |