226நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஏற்றத் தாழ்வுகள் எண்ணாமல்
       எவ்விதப் பிசகும் பண்ணாமல்
போற்றும் அன்பே நெறியாகப்
       பொதுநல வாழ்வே குறியாகச்
சாற்றும் படிவரும் பொன்னானே
       சமரசப் பொங்கல் நன்னாளாம்
ஆற்றல் பற்பல எய்திடினும்
       அறமே எதிலும் செய்திடுவோம்.       6

மைந்தரும் உங்கள் மனைவியுடன்
       மற்றுள சுற்றம் அனைவருமே
சுந்தரப் பொலிவுடன் களிகொண்டு
       சுவைமிகும் பொங்கல் அமுதுண்டு
சிந்தையில் தெய்வம் தங்கிடவும்
       சிறப்புடன் மங்களம் பொங்கிடவும்
வந்தனை பொங்கும் மனத்தோடு
       வணங்கி உங்களை வாழ்த்துகிறோம்.       7

குறிப்புரை:- இங்கிதம், - கருத்து, இனிமை, குறிப்பு;
ஆற்றல் - சக்தி; பொலிவு - அழகியதோற்றம்;
பகடு - யானை, எருமை.

165. உழவுப் பொங்கல்

பொங்குக பொங்கல் பொங்குகவே
       புதுவளம் நிறைந்தறம் தங்குகவே!
எங்கணும் யாவரும் இன்பமுற
       ஏர்த்தொழில் ஒன்றே தென்புதரும்.       1

உணவுப் பொருள்கள் இல்லாமல்
       உயிரோடு இருப்பது செல்லாது;
பணமும் அதுதரும் நலனெல்லாம்
       பயிர்கள் விளைப்பதன் பலனேயாம்.       2