கட்சிச் சண்டைகள் பட்டாரைக் கட்டுக் கட்டாய்ச் சுட்டேபின் பட்சம் வந்த மனத்துடனே பழகுவம் எல்லாம் இனத்துடனும். 4ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம்; ஒருவருக் கொருவர் உபகாரம்; இவ்வித வாழ்வே தினந்தோறும் இருந்திட வேண்டிநம் மனம்கோரும் 5 ஈயாப் பத்தரும் ஈந்திடும்நாள் ஏகிடும் அடிமையும் ஓய்ந்திடும்நாள் நோயால் நொந்தே இளைத்துவரும் நோன்பெனக் கொஞ்சம் செழித்திடுவார். 6 ‘ஐயா பசி‘யென் பாரில்லை ‘அப்புறம் வா‘யென் பாரில்லை மெய்யே அன்பு மிகுந்திடும் நாள் வேற்றுமை விட்டு மகிழ்ந்திடும் நாள். 7 மாச்சரி யங்களும் மறைந்திடும்நாள் மனிதன் இயல்பு சிறந்திடும்நாள் ஆச்சரி யம்போல் எல்லோரும் ஆடலும் பாடலும் சல்லாபம். 8 172. சுதந்தரத் திருநாள் இந்திய நாட்டின் சுதந்தரத் திருநாள் இன்பம் யாவையும் இனிமேல் தரும்நாள்; செந்தமிழ்த் தாயின் திருப்புகழ் பாடித் தெய்வம் தொழுவோம் யாவரும்கூடி. 1 அன்னிய ஆசைகள் அனைத்தையும் ஒழித்தோம்; ‘அடிமை‘ என்னும் சொல்லையும் அழித்தோம்; பொன்னையும் சுகத்தையும் செலவழித் தேனும் பூரண சுதந்தரம் அடைந்திட வேணும். 2 |