புத்தம் புதியஉடை தரித்தே - எழில் பொங்கும் மலர்மணங்கள் விரித்தே சித்தம் வியக்கஒளி வீசிப் - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மெத்தப் படித்தவரும் கேட்டுப் - பயன் மேவும் மெய்யறிவு கூட்டும் தித்திக்கும் கீதங்கள் பாடி - வந்த தெய்வக் கண்ணனிடம் ஓடி. 3 கண்ணன் அறிவுரைகள் கேட்போம் - ஒருக் காலும் சோர்ந்திருக்க மாட்டோம் பண்ணும் எந்தஒரு செயலும் - சுய பாசம் அற்றிருக்க முயலும் எண்ணம் மிகத்தெளிவு கொண்டோம் - அவன் என்றும் பணிபுரியக் கண்டோம் திண்ணம் கண்ணனுடை உறவால் - நாம் தீரச் சிறப்புகளைப் பெறுவோம். 4 171. தீபாவளி எனும் திருநாள் தீபாவளிஎனும் திருநாளே தெய்வம் அன்பென வருநாளாம் கோபா வளிகளைக் கொளுத்திடும்நாள். கொஞ்சிக் குலவிக் களித்திடும்நாள். 1 தனித்தனி வீட்டின் தரைமெழுகி, தரித்திரப் பீடையைத் தலைமுழுகி, மனத்துயர் யாவையும் மறந்திடுவோம்; மகிழ்வுடன் உள்ளதை விருந்திடுவோம். 2 உதவாப் பழசாம் வழக்கமெல்லாம் உதறித் தள்ளுதல் ஒழுக்கமெனப் புதிதாம் ஆடைகள் புனைந்திடுவோம். புதுப்புது வழிகளில் நினைந்திடுவோம். 3 |