புலவர் சிவ. கன்னியப்பன் 235

174. காந்தி பிறந்த நாள்

கத்திய வார்தன்னில் - காந்தி
       கதைதரும் போர்பந்தர்
புத்திலி பாய் அன்னை - செய்த
       புண்ணிய மேஎன்ன
உத்தமன் பிறந்ததினம் - அறிஞர்
       உவந்திடும் சிறந்ததினம்
இத்தினம் மகிழ்வோடு - காந்தி
       எம்மான் புகழ்பாடு.       1

ஆர்வங் குன்றாமல் - காந்திய
       அறவழி நின்றோமேல்
போர்ப்பயம் மறைந்துவிடும் - உலகில்
       புலைகொலை குறைந்துவிடும்
பார்தனில் எல்லோரும் - மனிதப்
       பண்புள நல்லோராய்ச்
சீர்பெற வாழ்ந்திடலாம் - தெய்வச்
       சிறப்புகள் வாழ்ந்திட லாம்.       2

வேறு

காந்தி மகானைப் பணிந்திடுவோம்
       காட்டிய அகிம்சை அணிந்திடுவோம்
சாந்தியின் இன்பம் நிறைந்திடுவோம்
       சண்டைகள் மிகவும் குறைந்திருப்போம்
மாந்தர் பிறப்பின் சிறப்படைவோம்
       மதவெறி இனவெளி அறப்பெறுவோம்
தாழ்ந்தவர் யாரையும் தாங்கிடுவோம்
       தன்னலக் கொடுமைகள் நீங்கிடுவோம்.       3

தன்னுயிர் இழந்திட நேர்ந்திடினும்
தான்பிற உடலொடு சேர்ந்திருக்கும்