புலவர் சிவ. கன்னியப்பன் 239

அன்னியர்கள் தமிழ்மொழியை அறிந்தோர் பார்த்தே
       அதிசயத்தில் காசைகொள்ளும் கவியாம் கம்பன்
தன்னையிந்தத் தமிழுலகம் மறக்க லாமோ?
       சரியாகப் போற்றாத தவறே போலும்!
என்னவிதம் எங்கிருந்தான் என்றும் கூட
       ஏற்பதற்காம் சரி்த்திரங்கள் ஏனோ காணோம்!
இன்னமும்நாம் இப்படியே இருக்க லாமோ?
       இழிவன்றோதமிழ ரெனும் இனத்துக் கெல்லாம்.       2

நிதிபடைத்தோர் கலைவளர்க்கும் நெறியைக் காட்டி
       நீங்காத புகழினுக்கோர் நிலைய மாகி
மதிபடைத்த புலமையுள்ளோர் எவரும் வாழ்த்த
       மங்காத பெருவாழ்வு தமிழுக் கீந்து
துதிபடைத்த ராமகதை தோன்றச் செய்த
       சோழவள வெண்ணெய் நல்லூர்ச் சடையன் சேரும்
கதிபடைத்த சொல்வலவன் கம்பன் பேரும்
       கடல்கடந்த நாடெல்லாம் பரவக் காண்போம்.       3

177. வன மகோத்ஸவம்

வனம கோத்ஸவ வைப வத்தினை
       வான்ம கிழ்ந்திட வாழ்த்துவோம்
ஜனம கோத்ஸவ மாக வேயிதைத்
       தமிழ கத்தினில் எங்கணும்
மனம கோத்ஸவ மங்க ளத்துடன்
       மக்கள் யாவரும் செய்திடில்
தினம ஹோத்ஸவ இன்ப மெய்திடத்
       திங்கள் மும்மழை பெய்திடும்.       1

மரம டர்ந்துள்ள வனமி ருப்பதன்
       மகிமை சொல்லவும் கூடுமோ?
வரம டைந்தென வளமை யாவையும்
       வலிய நம்மிடை நாடுமே.